தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை - பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தென்காசியில் சொத்து தகராறில் அரசு வழக்கறிஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தென்காசி அருகே உள்ள ஊர் மேனியழகியான் என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது அலுவலகம் தென்காசி கூலக்கடை பஜாரில் செயல்பட்டு வந்தது. இன்று பகல் 12 மணிக்கு இவர் அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இவரை அரிவாளால் சரமரியா வெட்டிவிட்டு ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சிவசுப்பிரமணியன் சிகிச்சைக்காக தென்காசி அரசுருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அரசு மருத்துவமனையில் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்
பட்டப் பகலில் அலுவலகத்திற்கு புகுந்து அரசு வழக்கறிஞர்கள் வெட்டப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனை முன்பு தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய எஸ்பி அரவிந்த் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. சொத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அவரது உறவினர் ஒருவரே இந்த சதி செயலில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


