"பி-டெக் படிப்பை போட்டு , 12 பெண்களுக்கு ரூட்டு போட்டு .."மேட்ரிமோனியல் சைட்ல நடந்த கேவலமான மேட்டர்

 
marriage


மேட்ரிமோனியல் சைட் மூலம் 12க்கும் மேற்ப்பட்ட பெண்களை ஏமாற்றிய வாலிபரை போலீஸ் கைது செய்தது 

BTech grad arrested for duping women on matrimonial websites
மஹாராஷ்டிராவின் தானேவின் டோம்பிவிலியில் வசிக்கும் 33 வயதான விஷால் சுரேஷ் சவான் என்ற அனுராக் சவான் என்ற வாலிபர் தான் பி-டெக் பட்டதாரி என்று கூறி ,ஓர் கல்யாண வெப் சைட் மூலம் தனக்கு பெண் தேடினார் .அப்போது அந்த மேட்ரிமோனியல் சைட்டில் அந்த சவாண் தன்னை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிவதாக கூறினார் .அந்த வெப்சைட்டில் அவரின் போட்டோவையும் படிப்பையும் ,வேலையையும் பார்த்து ஏமாந்த பல  பெண்கள் அவரை கட்டிக்க போட்டி போட்டனர் .அதை சாதகமாக பயன் படுத்திய அவர் 12க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வலை விரித்தார் .அவரின் வலையில் விழுந்த அந்த பெண்களிடம் அவர் ,ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு விதமாக ஏமாற்றியுள்ளார் .
அதன் படி 28 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் ,அவருடன் அந்த சவாண் பணம் கறக்க திட்டமிட்டு ,தன்னுடைய க்ரெடிட் கார்டு பிளாக் ஆகிவிட்டதென்று கூறி 2.5 லட்ச ரூபாய் பணம் கறந்தார் .அதன் பிறகு அந்த பெண்ணை கட்டிக்காமல் ஏமாற்றி வந்தார் .இதனால் அந்த பெண்  அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அவரை பற்றி விசாரித்த போது ,அவர் இதுபோல் 12க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி வந்துள்ளது கன்டுபிடிக்கப்ட்டது .பின்னர் அந்த சவானை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவரிடம் இதுபோல் ஏமாந்த பெண்கள் புகாரளிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டனர்