மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தாவை அடித்து கொன்ற பேரன்! பாட்டி உயிருக்கு போராட்டம்

 
murder murder

மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டி மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (70). இவரது மனைவி ராணி(65) உடன் சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு கலைவாணி என்ற மகள் இருந்து வருகின்றார். கலைவாணியின் மகன் பிரகாஷ் (26) வெல்டர் வேலை செய்து வருகின்றார். பிரகாஷ் குழந்தை பருவத்தில் இருந்தே தனது தாத்தா முனுசாமி, பாட்டி ராணி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது தாய் கலைவாணி தனது கணவருடன் வாழப்பட்டு பகுதியில் வசித்து வருகிறார். தாத்தாவுடன் வசித்து வந்த பேரன் பிரகாஷ் மது போதைக்கு அடிமையாகி நாள் முழுவதும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று பிரகாஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகின்றது. 

மீண்டும் மது குடிக்க பணம் வேண்டும் என தாத்தாவிடம் கேட்டுள்ளார். தாத்தா பணம் கொடுக்க மறுக்கவே ஆத்திரத்தில் பிரகாஷ் தாத்தாவை கடுமையாக தாக்கியுள்ளார், இதனை தடுக்க வந்த பாட்டியையும் கொடூரமாக அவர் தாக்கிய நிலையில் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் முதியவர் முனுசாமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதியவர் முனுசாமி சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்து பாட்டிக்கு தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் போரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரகாஷ் குடிபோதையில் இருந்து வந்ததால் கைது செய்து உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.