"புதைச்சிட்டேன்னு இப்படி சிதைச்சுட்டிங்களே" -கொரானாவால் இறந்தவர்களுக்கு நடந்த கொடுமை.

 
Covid

கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் உடல்களை ஒன்னரை ஆண்டுகளாக அடக்கம் செய்யாமல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை 16 மாதங்களாக மார்சுவரியில் வைத்திருந்த மருத்துவமனை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் 40 வயதான துர்கா சுமித்ரா  மற்றும் 50 வயதான முனிராஜ் ஆகியோர் கடந்த ஆண்டு கொரோனா  பாதிக்கப்பட்டு, பெங்களூரு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2020ம் ஆண்டு ஜூலையில் இறந்து விட்டனர்  
அதன் பிறகு அந்த மருத்துவமனை ஊழியர்கள் இருவரின் உடல்களை தாங்களே அடக்கம் செய்துவிடுவதாக அவர்களின் உறவினர்களிடம் கூறியதால் ,உரவினர்கள் சென்று விட்டனர் .அதன் பிறகு அந்த ஹாஸ்ப்பிட்டல் ஊழியர்கள் அந்த இருவரின் உடலை அங்குள்ள பழைய பிணவறையில் அடக்கம் செய்யாமல் போட்டு விட்டு சென்று விட்டனர் .அதன் பிறகு அந்த பிணவறை பயன்படுத்தப்படாமல் போனது .அதன் பிறகு சமீபத்தில் அந்த பிணவறையை சுத்தம் செய்ய வந்த போது , இருவரின் உடல்களும் சிதைந்த நிலையில் அழுகி கிடந்துள்ளது .இதை பார்த்த ஹாஸ்ப்பிட்டல் ஊழியர்கள் நிர்வாகத்திடம் கூறினர் .
பின்னர் இந்த விஷயம் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்களிடம் பரவியதால் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை  எடுக்க போராடினார்கள் .மேலும் கொரானா மரணங்கள் குறைந்து போனதாலும் , ஊழியர்களின் மறதியாலும்  இந்த தவறு நடந்ததாக ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.