கட்டிய மனைவியே ரூ.3 கோடி பணத்தை ஏமாற்றியதாக கணவன் கண்ணீருடன் புகார்

 
Wife Wife

இராமநாதபுரத்தில் தனது மனைவி தான் வேலைபார்த்து சேர்த்த 3.5 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு தன பிள்ளைகளை கூட பார்க்கவிடாமல் தன்மீது பொய்யான பாலியல் புகார் அளித்துள்ளதாகவும் தனது பணத்தையும் பிள்ளைகளையும் மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தன்டையால் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்வர் ராஜா B.Tech பட்டதாரியான இவருக்கும், ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த 'ஹைரூன் ஜாரியா' என்பவருக்கும் கடந்த 2017 ம் ஆண்டு திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், அன்வர் ராஜா திருமணமாகி ஒரு மாதம் ஆன உடனேயே சவூதி அரேபிய நாட்டிலுள்ள எண்ணை கம்பெனி ஒன்றில் இரண்டரை லட்சரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இப்படி வருவாயை கருத்தில் கொண்டு  அரபுநாடு சென்றுவிட்டதால் தனது மனைவியான ஹைரூன் ஜாரியா, அவருடைய தந்தை வீட்டில் இருந்து வந்ததாகவும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை விடுப்பில் வந்து தனது மாமனார் வீட்டிலேயே மனைவி குழந்தைகளோடு இருந்துவிட்டு  மீண்டும் வேலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டதாகவும் கூறப்படுகிறது.பின்னர், ஒரு கட்டத்தில் தனது மாமனார் வீட்டிற்கு அருகிலேயே ஒருவீடு வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் குழந்தைகளை தங்க வைத்துள்ளார். விடம் றையில் ஊருக்கு  வரும்போதெல்லாம் அங்கே தங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து தனது வருங்கால தேவை கருதி தனது செல்வம் கொழிக்கும் அரபு நாட்டு சம்பளம் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு  தனது மனைவி ஹைரூன் ஜாரியா மற்றும் மாமியார் பாத்திமா பீவி  ஆகியோர் உங்களுக்கென தனியாக இடம்  வாங்கி வீடு கட்டலாம் என யோசனை சொன்னதன் பேரில் பலமுறை தனது வங்கி கணக்கிலிருந்து மனைவி ஹைரூன் ஜாரியா ,மாமியார் பாத்திமா பீவி மற்றும் அவரது மைத்துனரான முஹம்மது அரபின் ஆகியோரின் வங்கிக்கணக்கிற்கு சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை பணம் அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், ரொக்கமாக கையில் ஒரு கோடி ரூபாய் வரை வழங்கியது என மொத்தமாக மூன்றரை கோடி ரூபாய் வரை கொடுத்த நிலையில், நிலம் வாங்கியதிலிருந்து வீடு கட்டியது வரை அனுப்பிய பொருள் அனைத்தையும் திட்டமிட்டே அவர்களது குடும்பத்தார் பெயரில் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் அரபு நாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு  தற்போது மனைவி மக்களோடு வாழலாம் என நினைக்கும் போது உன் பெயரில் எதுவுமில்லை, எனக் கூறி தனது மனைவி தன் மீது வெளிநாட்டில் இருக்கும் போதே நேரில் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விவாகரத்து கேட்பதோடு தன்  குழந்தைகளையும் பார்க்க விடாமல் மிரட்டல் விடுப்பதாக தழுதழுத்த குரலில் கூறிய அவர், தன் மனைவி குடும்பத்தார் தன்னிடம் ஏமாற்றிய பணத்தை மீட்டு தருவதோடு தன் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனுவளித்துள்ளார்.

கட்டிய மனைவியே கணவனிடம் பணத்தை மோசடி செய்து குழந்தைகளை காட்டாமல் மிரட்டுவதாக கணவன் போலீசில் புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.