மனைவியை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று துப்பட்டாவால் கொலை செய்த கணவன்!

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் மனைவியை அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற கணவனை அவ்வழியாக சென்றவர்கள் பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் அடுத்த மாதேஸ்வரன் கோயில் மலை அடிவாரம் அருகே, அடர்ந்த வனப்பகுதிக்குள், நேற்று மாலை பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அடர்ந்த வனத்துக்குள் பொதுமக்கள் சென்று பார்த்த போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, ஆண் ஒருவர் துப்பட்டாவால், அந்தப் பெண்ணின் கழுத்தை நெருக்கிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அப்போது அவர்களை கண்டதும், கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்துவிட்டார். அப்போது அந்த பெண் அண்ணா, என்னை காப்பாற்றுங்கள், என்னை அடித்து கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று கதறி உள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு, அந்த ஆணையும் அழைத்து பொதுமக்கள் விசாரித்த போது, இருவரும் கடம்பூர் மலைப்பகுதி, சின்னகுன்றி மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் கணவன் மனைவி என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி இருவரையும் அழைத்து காவல் நிலையத்திற்கு சென்றனர். அடர்ந்த வனப்பகுதியில், மனைவியை அழைத்துக்கொண்டு கொலை செய்யும் நோக்கத்தில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.