காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிய கணவன்
திருவண்ணாமலையில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிய கணவன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பே கோபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா. திருவண்ணாமலையில் உள்ள கவரிங் கடையில் பணிபுரிந்து வந்த சரண்யாவிற்கும், கோபிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த தீபாவளி தினத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று மகளுக்கு வாழ்த்து கூற அவரது தாய் அரசுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காவேரி, சரண்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொழுது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு பேச முடியாததால், சந்தேகம் அடைந்த காவேரி மகளின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கடந்த சில நாட்களாகவே மகள் வீட்டில் இல்லை என கூறியதாகவும், அக்கம் பக்கம் விசாரணை செய்ததில் சந்தேகம் அடைந்த காவேரி தங்களது உறவினர் இல்லங்களிலும் தேடி பலன் இல்லாததால் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என புகார் அளித்தார்.
இதுகுறித்து மருமகன் கோபியிடம் கேட்ட பொழுது சரியான பதில் அளிக்காமல் இருந்ததால் புகாரில் மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் மனைவி காணாமல் போன எந்த ஒரு சுவடும் இல்லாமல் ஆட்டோ ஓட்டுனர் கோபி திருவண்ணாமலைிலேயே சுற்றி வந்துள்ளார். மாமியார் புகார் அளித்ததும் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த அவர், வீட்டிற்கு காவல்துறையினர் சென்றதும் உடனே தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கோபியை கைது செய்து விசாரணை செய்தியில் தனக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு மனைவியை கொலை செய்ததாகவும், 8 துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் வைத்து கிருஷ்ணகிரிக்கு அருகாமையில் உள்ள காட்டில் வீசிவிட்டு சென்றதாகவும் ஒப்புக் கொண்டதாக முதற்கட்டன்சாரணையில் தெரிய வருகிறது. இதையடுத்து கோபியை கைது செய்த நகர போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.