ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை தாலி கயிற்றால் கழுத்தை நெருக்கி கொன்ற கணவன்

 
murder murder

வடபாதிமங்கலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த தனது மனைவியை தாலி கயிற்றால் கழுத்தை நெருக்கி கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

murder

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வடபாதி மங்கலம் அருகே ஊட்டியாணி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (55), இவரது மனைவி செல்வி ( 48 ) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர்‌பெயிண்டராகவும், மற்றொருவர் போட்டோ பிரேம் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். விவசாய கூலி தொழிலாளியான ரமேஷ் கூலி வேலைக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிவது வழக்கம். ரமேஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரவு மது குடித்துவிட்டு தனது மனைவி செல்வியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் ஆசைக்கு இணங்க மறுத்த தனது மனைவியை தர தரவென இழுத்து கொண்டு கொல்லையில் வைத்து தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி வாயை துணியால் மூடி ஆசைக்கு இணங்க கட்டாய படுத்தி உள்ளார். இந்நிலையில் கழுத்தை தாலி கயிற்றால் நெறுக்கியதாலும், துணியால் வாய் மூக்கை மூடி துன்புறுத்தியதால்‌ ரமேஷ் மனைவி செல்வி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் . இதனை தொடர்ந்து ரமேஷ் மகன்கள் இருவரும் வடபாதிமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வி உடலை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கணவன் ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி ரமேஷ் தனது மனைவியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாகவும், அதற்கு தனது மனைவி, மகன்கள் இருக்கிறார்கள் பின்பு வருவதாகவும் தெரிவித்தார். உடனே வரவில்லை என்பதால் ஆத்திரமடைந்து தனது மனைவியை தாலி கயிற்றின் மூலம் கழுத்தை இறுக்கி வாயை மூடி கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார்.

death

இதுகுறித்து அந்த பகுதி தெருவாசிகள் கூறுகையில் ரமேஷ் கூலி வேலைக்கு செல்லாமல் சாலையில் சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதே போல் பெண்களை பார்க்கும் பொழுது ஆபாசமாக பார்ப்பதாக. கூறும் படுகிறது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலையில் சென்ற பெண் ஆசிரியரை காட்டுக்குள் இழுத்துச் சென்று நகையை பறித்துக் கொண்டு ஆசைக்கு இணங்க துன்புறுத்தியதாகவும், அச்சமயம் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இவரை பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தாகவும் கூறுகின்றனர். வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர்.