10 ஆண்டுகால திருமண வாழ்க்கை... குழந்தையில்லா ஏக்கம்! மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

 
murder

செம்பட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை குத்தி கொலை செய்து விட்டு  தப்பி ஓடிய கணவனை காவல்துறை தேடி வருகின்றனர்.

murder

திண்டுக்கல் மாவட்டம்  செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் இவரது மகள் துர்காதேவி (28) இவருக்கும் தேனி மாவட்டம்,  பெரியகுளம் அருகே, வடுகபட்டியை சேர்ந்த ஜெயகணேஷ் (38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜெயகணேஷ், துர்காதேவி தம்பதியினர் அழகர்நாயக்கன்பட்டியில் வாடகை வீட்டில்  வசித்து  வந்தனர். ஜெயகணேஷ் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளை மாஸ்டராகவும்,  துர்காதேவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரி உணவகத்தில்  (கேண்டீன்) வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், திருமணம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  அழகர்நாயக்கன்பட்டியில்  கணவனுடன்  வாடகை வீட்டில் வசித்து வந்த,  துர்காதேவி, கணவனிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக  தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று  திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி கேண்டினில் வேலைக்குச் சென்ற, துர்காதேவியிடம் நேரில்  சென்று தகராறில்  ஈடுபட்டுள்ளார். பின்னர், இரவு வீட்டில் தனியாக இருந்த துர்காதேவியை ஜெயகணேஷ் கத்தியால் குத்தி விட்டு, வீட்டிலிருந்து  தப்பி ஓடி விட்டார். துர்காதேவி  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது,  துர்காதேவி  ரத்த வெள்ளத்தில்  சம்பவ இடத்தில் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, செம்பட்டி காவல் சார்பு  ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் உயிரிழந்த துர்காதேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து,  மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து  விட்டு, தப்பி ஓடிய ஜெயகணேஷ் என்பவரை தேடி வருகின்றனர். செம்பட்டி அருகே மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.