மனைவியுடனான கள்ள தொடர்பை கண்டித்த கணவர் கொலை

சிவகாசியில் மனைவியுடனான கள்ள தொடர்பை கண்டித்த கணவர் கொலை செய்யப்பட்டார்.
சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் வசித்தவர் கருப்பசாமி(வயது 35). இவருக்கு கற்பகம் (வயது 30) என்ற மனைவியும், கவின்( வயது4) என்ற மகனும் கவினா ஸ்ரீ( வயது 2) என்ற மகளும் உள்ளனர். கணவர் கருப்பசாமி பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்த நிலையில், மனைவிகற்பகம் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். கற்பகத்திற்கும் அருகிலுள்ள முருகன் காலனியில் வசிக்கும் தூரத்து உறவினர் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் ஓட்டுநர் மாரிமுத்துக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு ஏற்பட்டு பழக்கமிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கருப்பசாமி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சமரசம் பேசிக் கொள்ளலாமென்ற பேச்சை நம்பி சென்ற கருப்பசாமியை சிவகாமிபுரம் காலனியிலிருந்து முருகன் காலனி செல்லும் வழியி லுள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன்பு ஒரு கும்பல் வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதுடன், அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி யோடியது. சம்பவம் குறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு பகுதிபோலீசார் கருப்பசாமியின் பிரேதத்தை கைப்பற்றி உடற் கூர் ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,பிரேத பரிசோதனைக்கு பின்பாக உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் பார்வையிட்ட பட்சத்தில், கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு தப்பி யோடிய கொலையாளிகளை தனிப் படைகள் அமைத்து வலை வீசி தேடிய நிலையில், மாரிமுத்து மற்றும் அவரது சகோதரர் பட்டாசு தொழிலாளி குமார், ஏற்கனவே கொலை வழக்குகளில் தொடர்புடைய பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கணேசன் மற்றும் ஜோசப் ஆகிய நான்கு நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் . மனைவியுடன் பழக்கமாகி தொடர்பி லிருந்தவரை தட்டி கேட்ட கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..