மாணவிகளிடம் தவறான தொடுதல்... இரவில் சிக்கிய தாளாளர்

 
h

மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு வந்த பள்ளி தாளாளரை இரவில் கைது செய்துள்ளனர் போலீசார்.  உடந்தையாக இருந்த தாளாளர் மனைவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.   இப்பள்ளியின் தாளாளர் குப்தீன் நஜீப்.   45 வயதான இந்த குப்தீன் நஜீப் பிளஸ் டூ மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் ரீதியான தவறான தேர்தலில் ஈடுபட்டுள்ளார். 

a

பாதிக்கப்பட்ட மாணவிகள் இதை பள்ளி தலைமை ஆசிரியர் காதரம்மாளிடம் சொல்லி புகார் கூறியிருக்கிறார்கள்.   ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறார்.  இதையடுத்து மாணவிகள் தாளாளர் மனைவியிடம் சொல்ல,  அவர், இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்து வைத்திருந்திருக்கிறார்.  மாணவியின் சொன்னதை மறைக்க முயன்று இருக்கிறார்.

இதை அடுத்து மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல , பெற்றோர்கள் முஸ்லிம் பெண்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் விசயத்தை சொல்ல முஸ்லிம் பெண்கள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

 அதன் பின்னர் மேலப்பாளையம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் குப்தீன் நஜீப்பை இரவில் கைது செய்துள்ளார்கள்.  மாணவிகள் புகார் அளித்தும் வெளியே  தெரியாமல் மறைக்க முயன்ற தாளாளரின் மனைவி முகமது பாத்திமா,  பள்ளி தலைமை ஆசிரியை காரம்மாள்  ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.