‘காதல்’சந்தியாவின் கணவர் ரிசார்ட் : அறை எடுத்து தங்கிய பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்

 
l


காதல் படத்தில் நடித்த நடிகை சந்தியாவின் கணவருக்கு சொந்தமான ரிசார்ட் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரமன் கேனி பகுதியில் உள்ளது.  வெங்கடேசனுக்கு சொந்தமான இந்த பீச் ரிசார்ட்டில் ரூம்பாயாக இருந்த சுபாஷ் செல்போனில் அங்கே தங்கிய பெண்களின் அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்கள் இருந்துள்ளன.  காதலர்கள் தூங்கியதும் மாற்று சாவி போட்டு உள்ளே சென்று கட்டிலுக்கு அடியில் படுத்திருந்தபோது பிடிபட்டுள்ளார்.

 கடந்த 19ஆம் தேதி அன்று இரவில் சென்னை கேகே நகரை சேர்ந்த இளைஞர் தன் காதலியுடன் அறை எடுத்து தங்கி இருந்திருக்கிறார்.   காதலர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்கள்.  அப்போது அந்த ரிசார்ட்டில் ரூம்பாயாக இருந்த இளைஞர் சுபாஷ், காதலர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று இருக்கிறார்.   மாற்று சாவி போட்டு அறையின் கதவை திறந்து இருக்கிறார்.  

k

 தூங்கிக் கொண்டிருந்த இளைஞரின் காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார்.  தன் காதலன் இப்படி நடந்து கொள்ள மாட்டாரே என்று சந்தேகம் அடைந்த அந்த இளம் பெண் வேகமாக எழுந்து அறையின் லைட்டை போட்டு இருக்கிறார்.  அப்போது காதலன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 

 காதலன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வேறு யார் தன்னிடம் இப்படி நடந்து கொண்டது என்று அறை முழுவதும் சுற்றி பார்த்து இருக்கிறார். பின்னர் கட்டிலுக்கு அடியில் உற்றுப் பார்த்தபோது அங்கு ரூம்பாய் சுபாஷ் மறைந்து இருந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு இருக்கிறார்.  இதில்  தூக்கம் கலைந்து எழுந்த காதலன்,    இளைஞரை வெளியே இழுத்து வந்து அடித்து நொறுக்கி  இருக்கிறார். 

 ரிசார்ட்டில் தங்கி இருந்த இளைஞரின் நண்பர்களும் அவரைப் போட்டு அடித்து உதைத்து இருக்கிறார்கள்.  பின்னர் கூவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து இளைஞர் சுபாஷை கைது செய்து,  தாக்குதலில் காயம் அடைந்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். 

அந்த இளைஞர் சீக்கியான் குப்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்திருக்கிறது.   இளைஞர் சுபாஷின் செல்போனை போலீசார் சோதனை இட்டதில் அந்த பீச் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கிய பல பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது.  இதன் பின்னர் போலீசார் சுபாஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.