அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தன்! ஆள் வைத்து போட்டுத்தள்ளிய அண்ணன்
அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் கொழுந்தன். தம்பியே தன் மனைவிக்கு இப்படி தொல்லை கொடுத்து வருவதை சகிக்காத அண்ணன் ஆள் வைத்து தம்பியை கொலை செய்து இருக்கிறார். போலீஸ் விசாரணையில் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது .
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அடுத்த ஜெயம் கொண்டான் கிராமத்தில் சீனிவாசன், தாய்ப்பால் தம்பதிக்கு நாகமுத்து, தைமுத்து, மாரிமுத்து, வீரமுத்து என்று நான்கு மகன்கள் . இதில் கடைசி மகன் வீரமுத்துவுக்கு அங்கம்மாள் என்கிற மனைவியும் இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது .
சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்த வீரமுத்து வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே கிராமத்திற்கு சென்று வந்திருக்கிறார். நேற்று முன் தினம் இரவு இவர் சொந்த ஊரில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது வீட்டின் அருகே சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து இருக்கிறார்.
கிராம மக்கள் இதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் வரவைத்து செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் . அங்கு நடந்த சிகிச்சையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதன் பின்னர் கொலை வழக்காக செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள் .
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் வீரமுத்துவுடன் கூட பிறந்த அண்ணன் மாரிமுத்து சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரித்த போது தான், அண்ணி என்றும் பாராமல் தன் மனைவிக்கு வீரமுத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். கூட பிறந்த தம்பியே இப்படி செய்கிறானே என்று ஆத்திரப்பட்டுத்தான் அவனை தீர்த்துவிட முடிவு செய்தேன். அதனால் தான் ஆட்களை வைத்து கொன்று விட்டேன் என்று கூறி இருக்கிறார். இதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.