"உள்ளாடையை இழுத்து ,உள்ளே இருப்பது தெரிய.."விமான பணிப்பெண்ணிடம் வாலிபரின் விபரீத செயல்

 
flights

ஒரு  விமானத்தில் பணிப்பெண்ணிடம் தனது டவுசர் மற்றும் உள்ளாடையை   கழற்றி அசிங்கமாக நடந்துகொண்ட வாலிபருக்கு  20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படடவுள்ளது.


அமெரிக்காவின் டப்ளினில் இருந்து நியூயார்க் செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஐரிஷ் நாட்டின் ஷேன் மெக்கினெர்னி எனும் 29வயது இளைஞர் பயணம் செய்தார் . அவர் ஒரு கால்பந்து அகாடமியில் வேலைக்கு சேருவதற்காக புளோரிடாவுக்குச் சென்றுகொண்டிருந்தார் .
இது கொரானா நேரம் என்பதால் விமான பணிப்பெண் அவரிடம்  விமானத்தில் முகக்கவசம் அணிய  பல முறை சொல்லியும் அவர்  அணிய மறுத்து,தகராறு செய்து  அவர் திடீரென்று  ஒரு கூல்ட்ரிங் பாட்டிலை  தூக்கியெறிந்து பயணி ஒருவரின் தலையில் அடித்துள்ளார். 
அதுமட்டுமின்றி, அநாகரீகத்தின் உச்சமாக, அவர் தனது டவுசரை  கழற்றி, உள்ளாடைகளை கீழே இழுத்துவிட்டு, ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் பயணிகள் முன் அசிங்கமாக நடந்துகொண்டுள்ளார்.
இதன் பேரில் அந்த பணிப்பெண் அவர்  மீது விமான நிலைய அதிகாரியிடம் புகார் கூறினார் .அதனால் அந்த விமானம், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் 
இந்த குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மெக்னெர்னிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று போலீசார் கூறினர்  .