புர்கா அணியாமல் சென்ற மனைவி, மகள்களை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த பயங்கரம்
உத்தரப்பிரதேசத்தில் புர்கா அணியாமல் சென்ற வெளியே சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவி மற்றும் அவரது இரு மகள்களை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சாமெலியை சேர்ந்தவர் பாரூக், இவரது மனைவி தாஹீரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரீன் என்ற மகளும், 6 வயதில் அஃப்ரீன் என்ற மகளும் இருந்தனர். தாஹீரா ஒரு இடத்திற்கு வேலை சென்று வருவது வழக்கம். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தாஹீராவோ, அவர்களது மகள்களோ வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களது நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஊர் தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராமத்து தலைவர், தங்கள் கிராமத்தில் வசித்துவந்த பெண் உள்ளிட்ட அவரது இரு மகள்களை காணவில்லை என்றும், கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனே விசாரணையில் இறங்கிய போலீசார்,பாரூக்கை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போடு தனது பேச்சை கேட்காமல் நடந்த காரணத்தால் மனைவியை கொலை செய்ததாக போலீசாரிடம் பாரூக் கூறியுள்ளார். வேலைக்கு செல்லும்போது புர்கா அணிய பல முறை அறிவுறுத்தியும் கேட்காமல் சண்டையிட்டதால் துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக தெரிவித்தார். அதன்மீது மனைவி மீதான வெறுப்பு காரணமாக இரு மகள்களையும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் பாரூக் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி மற்றும் இரு மகள்களின் சடலங்களை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்திருப்பதாகவும் கூறி பரூர் போலீசாரை அதிரவைத்தார். உடனே பாரூக்கின் வீட்டிற்கு சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர். தனக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம் என்பதால் இந்த கொலைகளை செய்ததாகவும், சடலங்களை வீட்டுக்குள் புதைத்ததாகவும் பாரூக் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


