"முதலில் மகளை கொன்று ,அடுத்து தன்னை கொன்று .." அந்த தொழிலதிபர் குடும்பத்துக்கு என்னதான் ஆச்சு?

 
cash

கொரானா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த தொழிலதிபர் ஒருவர் , தன் மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

suicide

தமிழகத்தை சேர்ந்த 39 வயதான விஜயகுமார் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்து ஹெப்பகோடியில் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து வசதியாக வாழ்ந்தார் .இவருக்கு 34 வயதான சந்திரகலா என்ற மனைவியும், 7 வயதில்  சமிக்ஷா, என்ற மகளும் உள்ளனர். அவரின் மகள் 2ம் வகுப்பு படிக்கிறார்.அந்த ஊரில் பேப்ரிகேஷன் தொழிற்சாலை நடத்திய விஜயகுமார் மகளை செல்வ செழிப்பாக வளர்த்து வந்தார் .இந்நிலையில்  ஊரடங்கால் தொழில் சரியாக நடக்காமல், நிறைய கடன் வாங்கியதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்.இதனால் கடன் காரர்கள் அவரை தொல்லை கொடுத்தார்கள் 

இதனால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளான இவர், நேற்று முன் தினம், மகளின் கழுத்தை ஒயரால் நெரித்து கொலை செய்தார். பின் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாலையில் தொழிற்சாலைக்கு சென்றிருந்த மனைவி, வீட்டுக்கு வந்த போது, மகளும் கணவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கூறினார் .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹெப்பகோடி போலீசார் இந்த கொலை, தற்கொலை பற்றி விசாரிக்கின்றனர்.