"முதலாளி மனைவியை கட்டி வைத்து ,எலெக்ட்ரிக் ஷாக் வைத்து .."ஒரு டிரைவரின் வெறித்தனம்

 
murder murder

வேலையை விட்டு நீக்கிய முதலாளி மனைவியை கொலை செய்து எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்த நபரை போலீஸ் கைது செய்தது .

Burari man kills ex-employer's wife
டெல்லியின் புராரி பகுதியில் வசிக்கும் குமார் என்பவர்  டெல்லி பல்கலைக்கழகத்தில்  உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் .இவரின் மனைவி பெயர் பிங்கி .இந்த தம்பதிகள் தங்களின் காரை ஓட்டுவதற்கு ஓட்டுநராக ராகேஷ் என்பவரை நியமித்தனர் .அப்போது அவர்கள் அந்த ராகேஷை தங்களின் கெஸ்ட் ஹௌஸிலேயே தங்க வைத்திருந்தனர் .அவருக்கு மாத சம்பளம் கொடுத்ததால் அவர்  அதில் திருப்தியடையவில்லை .அதனால் அதிக பணம் கேட்டு அந்த குமாரிடம் தொல்லை கொடுத்தார் .அதனால்  அந்த குமாரின் மனைவி பிங்கி அந்த ராகேஷுக்கு 3 லட்ச ரூபாய் பணம் கொடுத்து செட்டில் செய்து வீட்டை விட்டும் ,வேலையை விட்டும் அனுப்பி விட்டார் .
இதில் அந்த ராகேஷ் மிகவும் கோவப்பட்டு அந்த பிங்கியை பழி வாங்க துடித்தார் .அதனால் கடந்த வாரம் திங்கள் கிழமை அந்த குமார் தன்னுடைய தாயாருடன் ஹாஸ்ப்பிட்டலில் இருக்கும்போது அவரின் வீட்டிற்கு சென்றார் .அப்போது தனியாக இருந்த அந்த பிங்கியை கழுத்து நெரித்து கொலை செய்த ,பிறகு  எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து விட்டார் .பிறகு அவர்  அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .அதன் பிறகு குமார் அந்த ராகேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலிசார் வழக்கு பதிந்து அந்த ராகேஷை கைது செய்தனர் .