"நிச்சயம் செஞ்ச பெண்ணால் தற்கொலை செஞ்சிக்க போனேன் " -அப்படி அந்த மணமகள் என்னதான் செஞ்சாங்க ?

 
marriage marriage

நிச்சயதார்த்தம் செய்த பெண் செஞ்ச டார்ச்சரால்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

suicide

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரைச் சேர்ந்தவர் 28 வயதான  சின்னதம்பி .இவருக்கு அவரின் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதே ஊரை சேர்ந்த 
18 வயதான அபிநயா  என்ற பெண்ணை கடந்த ஜூன் 28-ஆம் தேதி பொது மக்கள்  முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையில் சொந்த ஊருக்கு வந்த சின்னத்தம்பி மிகவும் ஆசையாக தனது வருங்கால மனைவிக்கு பல பரிசுகளை வாங்கி கொடுத்தார் 
மேலும்  தனது வருங்கால மனைவி மீது ஏற்பட்ட அதீத காதலால் 2 சவரன் தங்க செயின், ரூ.13ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பெண்ணின் தந்தைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை தனது சொந்த செலவில் சின்னதம்பி வாங்கித்தந்துள்ளார்.
பின்னர் திடீரன்று அந்த மணமகளின் குடும்பத்தினர் அந்த மாப்பிள்ளைக்கு போன் செய்து மணமகளை காணவில்லையென்றும், கல்யாணத்தை நிறுத்திவிடுமாறு கூறினர் .அதை  கேட்டு அதிர்ச்சியான அந்த மாப்பிளை தான் வாங்கி கொடுத்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  பொருட்களை திருப்பி கேட்டார் .ஆனால் அந்த பெண் வீட்டார் அதை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர் .பின்னர் அந்த மாப்பிளை அதிர்ச்சியாகி தற்கொலைக்கு முயன்றார் .இப்போது அந்த சின்ன  தம்பி ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .