"அண்ணே ஓசியில ஒரு குவாட்டர் கிடைக்குமா ?"தர மறுத்த கடைக்காரர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 
atm theft atm theft

ஒரு மதுபான கடைக்கு வந்த ஒரு குடிகாரர்,ஓசியில மதுபானம் கொடுக்காத கோவத்தில் அங்கிருந்த ஒரு மதுபானம் அடங்கிய பெட்டியை  தூக்கி சென்ற சம்பவம் பலரை அதிர செய்துள்ளது .

liquor

புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் ஒரு மதுபான கடை இயங்கி வருகிறது .அந்த மதுக்கடையை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது .அந்தக்கடைக்கு தினமும் பல நூறு குடிமகன்கள் வந்து குடித்து செல்வதும் ,பல சரக்கு பாட்டில்களை வாங்கி செல்வதும்  வழக்கம் .இந்நிலையில் அந்த கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குடிமகன் வந்தார் .அவரிடம் குடிக்க பணமில்லாத காரணத்தால் அந்த கடைக்காரரிடம் ஓசியில் குடிக்க ஒரு குவாட்டர் பாட்டில் கேட்டார் .ஆனால் அந்த கடைக்காரர் தர மறுத்து விட்டு ,கடைக்குள் சென்று அங்கிருந்த மற்ற குடிமகன்களுக்கு சரக்கு சப்லை செய்ய போய்விட்டார் .இதனால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள அந்த குடிமகன் நினைத்தார் .அப்போது அந்த கடையின் டேபிள் மீது இருந்த பல மது பாட்டில் அடங்கிய ஒரு பெட்டியை தூக்கி கொண்டு ஓடிவிட்டார் .இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அதன் பிறகு  அந்த கடைக்காரர் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து அங்கிருந்து சிசிடிவி கேமெரா காட்சியை கொண்டு அந்த குடிமகனை  தேடி வருகின்றனர் .