தங்கையின் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை - வாயில் துணியை வைத்து அடைத்து அண்ணன் வெறிச்செயல்

 
si

தங்கையின் ஆடையில் ரத்த கறையை பார்த்த அண்ணன் அது மாதவிடாய்க் கான ரத்தக்கரை என்பதை அறியாமல்,  தங்கைக்கும் அது மாதவிடாய் என்பது தெரியாமல் இருந்த நிலையில்,   பாலியல் உறவில் தான் தங்கைக்கு அந்த ரத்தக்கறை ஏற்பட்டிருக்கிறது  என்று தவறாக புரிந்து கொண்ட அண்ணன் தங்கையின் வாயில் துணியை வைத்து அடைத்து அடித்து உதைத்து உடல் முழுவதும் சூடு வைத்ததில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

 மும்பையில் தானே மாவட்டத்தில் உல்லாஸ் நகர்.  இப்பகுதியில் பிரிஜேஷ் என்கிற முப்பது வயது வாலிபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.  அவருடன் அவரின் தங்கையும் வசித்து வந்திருக்கிறார்.  தாய் ,தந்தையை இழந்து விட்டதால் அண்ணன் குடும்பத்துடன்  அந்த 12 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தங்கையின் ஆடையில் ரத்த கறையை பார்த்திருக்கிறார்.  எப்படி வந்தது என்று விசாரித்து இருக்கிறார். 

b

 அந்த சிறுமிக்கு அப்பொழுதுதான் முதல் முதலாக மாதவிடாய் ஆரம்பித்திருக்கிறது . அது மாதவிடாய் என்பது அச்சிறுமிக்கு தெரியாததால் அண்ணனிடம் என்னவென்று சொல்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்.  இதை அண்ணன் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்.  தனது தங்கை யாருடனோ பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார்.  அதனால் தான் இப்படி ரத்தக்கரை வந்திருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டு தங்கையை கொடுமைப்படுத்தி இருக்கிறார். 

 நான்கு நாட்களாக அடித்து உதைத்து இருக்கிறார்.   சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக வாயில் துணியை வைத்து அடைத்து அடித்து உதைத்து இருக்கிறார். ஈவு இரக்கமே இல்லாமல் தங்கையின் உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார் . இதில் சிறுமி போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். 

 இதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிரிஜேஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார் . அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் சிறுமிக்கு மாதவிடாய் பற்றி எதுவும் தெரியவில்லை . அதனால் அது பற்றி அண்ணனிடம் சொல்ல முடியவில்லை . இதனால் தங்கை வேறு ஒருவருடன் பாலியல் உறவில் இருக்கிறார் என்பதை தவறாக புரிந்து கொண்டு அடித்த உதைத்து உடல் முழுவதும் சூடு வைத்ததில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கிறார் என்று வழக்குபதிவு செய்துள்ளனர்.