பணத்துக்காக பெற்ற மகளை விபச்சாரத்தற்கு தள்ளிய தாய்!

 
க்

பணத்திற்காக முதல் கணவனுக்கு பிறந்த பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய கள்ளக்காதலன் மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி- கிருஷ்ணாபுரம் பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பணத்திற்காக பெற்ற தாய் தனது மகளை விபச்சாரத்தல் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. பின்னர் அங்கு இருந்த நபர்களை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, இங்கு உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராசாத்தி என்ற பெண்மணி தனது முதல் கணவர் சண்முகசுந்தரத்துடன் கருத்து வேறுபாட்டால் 20 வருடங்களுக்கு முன் பிரிந்து, பிரேம் நசீர் என்ற நபருடன் பழகி, இருவரும் திருமணம் செய்யாமல் ராசிபாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கு முதல் கணவருக்கு பிறந்த 20 வயதான பெண்ணை, ராசாத்தி மற்றும் பிரேம் நசீர் மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

பின்னர் ராசாத்தி மற்றும் பிரேம் நசீரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் பிரேம் நசீரை அடைத்தனர். கைதான ராசாத்தியை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.