மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனாரின் ஆணுறுப்பை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாமியார்

 
மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனாரின் மர்ம உறுப்பை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாமியார்

நெய்வேலியில் மருமகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த கணவரின் மர்ம உறுப்பை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rape


கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பழைய நெய்வேலி பகுதியில் வசித்து வருபவர் சரவணன்(55). கட்டிட தொழிலாளியான இவருக்கு ராஜா(33) என்ற மகன் உள்ளார். ராஜா வெளியூரில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகிறார். ராஜாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா வெளி ஊரில் கட்டுமான வேலைக்கு சென்று தங்கும் போது, மாமனார் சரவணன், மருகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதற்கு சரவணன் மனைவி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து,  தனது மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு, மருமகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

காதலியின் வருங்கால கணவர் வீட்டை தீயிட்டு கொளுத்திய காதலன்: கோபத்தில்  விளைந்த விபரீதம் - லங்காசிறி நியூஸ்

தன்னுடைய மூன்று பெண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதை அறிந்த மருமகள், மாமியாருடன் சேர்ந்து மாமனார் சரவணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதனால் சரவணன் தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து அவரது மர்ம உறுப்பு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால், சரவணன் மீது தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்ட சரவணின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து தீயை அணைத்து அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 65% தீ காயங்களுடன் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி, மருமகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனாரை மருமகள் மற்றும் மனைவி தீ வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.