4 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த தாயின் கள்ளக்காதலன்

 
4 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாயின் கள்ளக்காதலன் 4 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாயின் கள்ளக்காதலன்

குலசேகரன்பட்டினம் அருகே 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்த சத்தியா (32). ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால் சத்தியா அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்தோஷியா (4) என்ற மகள் உள்ளார். கணவன் மணியுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியா தனது குழந்தை சந்தோஷியுடன் குலசேகரன்பட்டினம் அண்ணா சிலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தற்சமயம் இரண்டு மாதங்களாக குலசேகரன்பட்டினம் அருகே உள்ள செட்டியாபத்து பகுதியில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சத்தியாவுக்கும் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் முருகன் மகன் இசக்கிராஜ் (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக இசக்கிராஜ் சத்தியாவுடன் தங்கியதாக தெரிகிறது. பின்னர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பின்னர் பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக சத்தியாவை பார்க்க வந்துள்ளனர்.
 
கடந்த ஜன 20-ம் தேதி காலை 9 மணி அளவில் சத்தியா குழந்தையை இசக்கிராஜிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்த போது குழந்தை பேச்சு மூச்சி இல்லாமல் இருந்துள்ளது. இருவரும் சந்தோஷியை உடன்குடி அரசு மருத்துவமனைக்கு ஏதோ வண்டுகடித்து விட்டதாக கூறி கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சந்தோஷி இறந்து விட்டதாக கூறி அவரது உடலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையில் உடல் காயங்கள் இருந்ததால் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இருவரை விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் குழந்தையின் இடுப்பு பகுதியில் பலமாக அழுத்தப்பட்டதற்கு காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து சத்தியா கொடுத்த புகாரின் பேரில் இசக்கிராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.