"கார்களை திருடியது இதுக்குத்தானா " ஆயிரம் கார்களை ஷோ ரூம் போல நிறுத்தி வைத்திருந்த பட்டதாரி .

 
Singer Vijay Yesudas car meets with accident; the singer escaped unhurt

ஒரு பட்டதாரி வாலிபர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடியதால் கைது செய்யப்பட்டார் .

டெல்லியை சேர்ந்த 25 வயதான தீபக் ராணா டிகிரி முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்தார் .அப்போது அவர் தான் எப்படியாவது குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக திட்டம் போட்டார் .அதற்கு அவர் பல தொழில்கள் செய்து தோல்வியுற்றார் .பிறகு கார் திருடும் தொழிலை தேர்ந்தெடுத்தார் .அதன் படி அவர் தன்னுடைய கூட்டாளி  ராம்ஜீத்துடன் சேர்ந்து புது டெக்னீக்கில் டெல்லி மற்றும் உத்திரபிரதேச பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடினார் .

Deepak Rana arrested by ATS

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீசுக்கு அவர்களை பற்றி தெரிய வந்தது .அதனால் போலீசார் அவர்களை பிடிக்க பல இடங்களில் சிசிடிவி கேமராவை வைத்தனர் .அதை ஆராய்ந்து பார்த்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ராணாவின் கூட்டாளி ராம்ஜீத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய  விசாரணையில் அவர்கள்  டெல்லி-என்சிஆர் மற்றும் உத்தரபிரதேசத்தில் செயல்பட்டதாக கூறினார் .மேலும்  விசாரணையின் போது, ​​திருடப்பட்ட வாகனங்களை மீரட்டில் விற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.பிறகு இந்த வழக்கில்  முக்கிய குற்றவாளி ராணாவை பிடிக்க வலைவிரித்தனர்

அதனால் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ராணாவின் புகைப்படங்களை எடுத்து அவற்றை மாநிலத்தின் பல போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பினர் .அப்போது  ராணாவும் அவரது மனைவியும் சிம்லாவுக்குச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சிம்லாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து ராணாவை  போலீசார் கைது செய்தனர்.