"படிக்க வைக்கறேன்னு பெண்ணை கூட்டி வந்து துடிக்க .. "-பத்ம ஸ்ரீ விருது வாங்கியவரின் பலான வேலை

 
arrest

மைனர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட வழக்கில் சிக்கிய, பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஒருவர்  சிறையில் அடைக்கப்பட்டார்.

gang rape

அசாமில் உள்ள கவுஹாத்தியில் உள்ள ஒரு பிரபலமான அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானி  உத்தவ் குமார் என்பவர் அங்குள்ள பராலியில்  வசித்து வருகிறார். இவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது .இவர் சமீபத்தில் ஒரு 14வயதான  மைனர் சிறுமி ஒருவரை படிக்க வைப்பதாக கூறி தத்தெடுத்து வளர்த்து வந்தார் .ஆனால் இவர், அந்த மைனர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து சிலர் கொடுத்த புகாரின் பேரில் ,போலீசார் விசாரணை செய்து ,அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் அந்த  பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆராய்ச்சியாளர் உத்தவ் குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த டிசம்பர் 28ம் தேதி விசாரித்த நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமின் வழங்கியது.அடுத்து இந்த பாலியல் குற்றம்  தொடர்பான வழக்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட சிறப்பு நீதிபதி முன்னிலையில், உத்தவ் குமார் சரணடைந்ததும் , அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.மேற்கொண்டு அவர் மீது அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது