60 அடி உயர ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்த பிளஸ்டூ மாணவி - டிக்கெட் பரிசோதகர் தலைமறைவு

 
p

பிளஸ்டூ மாணவி ஒருவர் 60 அடி உயர ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  காலில் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர் தலைமறைவாகி இருக்கிறார்.  

 புதுச்சேரி மாநிலத்தில் நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.   நேற்று முன் தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த மாணவி குடும்பத்துடன் வீட்டிற்கு அருகே உள்ள கோவிலுக்கு சென்று இருக்கிறார்.   பின்னர் மாணவியின் சகோதரரும் வீடு திரும்பி இருக்கிறார்கள்.  பெற்றோர் கோவிலிலேயே இரவில் இருந்துள்ளனர்.

 இந்நிலையில் நேற்று அதிகாலையில் கோவிலில் பூஜை முடிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.   நேற்று அதிகாலையில் பெற்றோர் பூஜ்ஜியம் முடிந்து வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.    அப்போது மகள் வீட்டில் இல்லை.   இதனால் அதிர்ச்சியடைந்து பெற்றோர், உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்துள்ளனர் .  எங்கும் இல்லாததால் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

bb

 போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.   அவர் தங்களது மகளை ஆசை வார்த்தை சொல்லி கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.    இதை அடுத்து போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து நேற்று  காலையில் விசாரணை நடத்தி வந்த நிலையில் ,  நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணையாற்றில் இளம்பெண் ஒருவர் கீழே குறித்து இருக்கிறார்.

 இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   60 அடி உயர பாலத்தின் மீது இருந்த அவர் கீழே குதித்த நிலையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.  வலது காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது.   கால் முறிவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

 தற்கொலை முயற்சி குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி தனியார் பேருந்து டிக்கெட் பரிசோதராக இருக்கும் பாபு என்கிற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார்.   நேற்று முன் தினம்  இரவு வீட்டில் இருந்த மாணவியை பாபு ஆசை வார்த்தை சொல்லி கடத்திச் சென்றிருக்கிறார்.   பின்னர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். 

 இது பெற்றோருக்கு தெரிந்தால் கடுமையாக கண்டிப்பார்கள் என்று பயந்த மாணவி பாலத்தில் இருந்து விதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.    மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த,  தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்த பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இது தெரிஞ்ச பாபு தலைமறைவாக இருக்கிறார்.  அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.