முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த பேராசிரியர்கள்

 
rape rape

திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவியை பாலியியல் பலாத்காரம் செய்த உதவி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

rape

திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாணவி முதலாம் ஆண்டில் படித்து வந்த நிலையில் அவரை உதவிப் பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மன் குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.  உதவிப் பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மன் குமார் மாணவியுடன் தனியாக இருக்கும்போது  அதனை மற்றொரு பேராசிரியர் சேகர் தனது தொலைபேசியில் படம்பிடித்து அந்தக் காட்சிகளைக் காட்டி மாணவியை அவரும் மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் புகார் அளித்தார். துணைவேந்தர் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி  பேராசிரியர் லக்ஷ்மன் குமாரை இடைநீக்கம் செய்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  

பாதிக்கப்பட்ட மாணவி சொந்த ஊரான  ஒடிசாவிற்கு சென்றதால் லக்ஷ்மன் குமார் , சேகர் மீது பல்கலைக்கழக பதிவாளர் ரஜினிகாந்த் சுக்லா மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் இரண்டு பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செல்போன்கள் பறிமுதல்  செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளிக்க வேண்டும் என போலீசார் கூறிய நிலையில் மாணவியின் பெற்றோர் புகார் வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் துணை வேந்தர் விசாரணை மாணவர்கள் நலனுக்காக உள்ள கமிட்டி மூலம்  அறிக்கை வழங்க உத்தரவிட்டுள்ளார். அறிக்கையில்  அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர்.