கர்ப்பமான காதலி -சிறைக்கு சென்ற காதலன் -அடுத்து ஜெயிலில் காதலனுக்கு நேர்ந்த கதி . Post Setting

 
arrest generic

ஒரு காதலியை கர்ப்பமாக்கியதால் சிறையிலிருந்த வாலிபர் இறந்ததால் அவரின் குடும்பத்தினர் சந்தேகத்தை கிளப்பி விசாரணை கோரியுள்ளனர் .
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் விகாஸ் கிரஷன் ஆதவல், மலாட் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண்ணை காதலித்தார் .அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததால் அந்த காதலி கர்ப்பமானார் .அதனால் அந்த பெண்னின் குடும்பத்தினர் போலீசில் அந்த காதலன் மீது புகாரளித்தனர் .அதனால் மலாட் போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலனை கடந்த ஜூலை மாதம் சிறையில் அடைத்தனர் .

Mumbai: Rape accused dies in custody; family says ‘death is suspicious’

இந்த வழக்கு விசாரணை அங்குள்ள கோர்ட்டில் நடைப்பெற்று வந்தது .இந்நிலையில் அந்த காதலன் விகாஸ் கிரஷன் மர்மமான முறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறையில் இறந்து கிடந்தார் .அதன் பிறகு போலீசார் அவரின் குடும்பத்தினருக்கு இந்த தகவலை தெரிவித்தனர் .அதை கேட்டு அதிச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் சிறைக்கு வந்து அவரின் பிரேதத்தை பார்த்து அழுது துடித்தனர் .பின்னர் அவர்கள் தங்களின் மகன் ஆரோக்கியமானவர், அவருக்கு எந்த நோயும் இல்லாத நிலையில் இப்படி திடீரென சிறையில் இறந்திருப்பது பல சந்தேகத்தை உண்டாக்குவதாக கூறினர் .அதனால் போலீசார்  இறந்த அந்த வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் .போலீசார் அவரின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அது வந்த பிறகுதான் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவருமென்று கூறினர் .