நண்பரின் மனைவியுடன் உறவு - கல்லை கட்டி ஏரியில் வீசிய நண்பன்

 
r

 நண்பரின் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்த வரை எவ்வளவோ கண்டித்து பார்த்தும் கேட்காததால் கடைசியில் அடித்து கொலை செய்வது நண்பனை கல்லை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 தாரமங்கலம் அடுத்து எம்ஜிஆர் காலனி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்.  இவரது மனைவி வெண்ணிலா.  சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார் ரமேஷ்.   இவர் கடந்த 16 ஆம் தேதி அன்று வேற ஒரு கார் வாங்குவதற்காக வெளியூர் சென்று வருகிறேன் என்று வெண்ணிலாவிடம் சொல்லி விட்டு சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

ra

 தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் எங்கே போனார் என்ன ஆனார் என்கிற தகவல் தெரியாமல் பதட்டம் அடைந்திருக்கிறார் வெண்ணிலா.  இதை உறவினர்களிடம் சொல்லி புலம்பியிருக்கிறார்.  அவர்களும் பல இடங்களில் முயற்சித்துப் பார்க்கும் எந்த தகவலும் கிடைக்காததால் தாரமங்கலம் காவல் நிலையம் சென்று ரமேஷ் மாயமானது குறித்து தகவல் அளித்து இருக்கிறார்கள்.

 இதையடுத்து வழக்குப் பதிவு செய்த தாரமங்கலம் போலீசார் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்க,   சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்,  ரமேஷ் குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைத்தார்.  தாரமங்கலம் காவல் ஆய்வாளர் , ஓமலூர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

 தமிழகம், கர்நாடகம், ஆந்திரா காவல்துறை அதிகாரிகளுக்கு ரமேசின் புகைப்படத்தை அனுப்பி விசாரித்து வந்த நிலையில் ,  கர்நாடக மாநிலம் நில மங்களா போலீசார் தங்களது ஊரில் உள்ள ஏரியில் சடலமொன்று பெரிய கல்லால் கட்டி வீசப்பட்டு இருந்ததாகவும்,  அந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர் .

இதை அடுத்து உடனே தாரமங்கலம் தனிப்படை போலீசார் சென்றனர்.  அங்கு  வைத்திருந்த புகைப்படங்கள்,  சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் சடலத்தின் கையில் கட்டப்பட்டிருந்த மணிக்கயிறு,  ஆடைகளை காண்பித்திருக்கிறார்கள்.  அது மாயமான ரமேஷ் உடையது   என்று தெரியவந்திருக்கிறது . ரமேஷ் உறவினர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  அவர்கள் இறந்து கிடந்தது ரமேஷ் தான் என்பதை உறுதிசெய்தனர். இதையடுத்து கொலை செய்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்த தொடங்கினர்.

ரமேஷின் நண்பர்களை  பிடித்து விசாரித்த போது அதில் சேகர் என்பவர் முன்னுக்குப் பின் முரணாக உளறி இருக்கிறார்.  அவர்  செல்போனை எடுத்து ஆய்வு செய்ததில் ரமேஷ் வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற 16ம் தேதியன்று சேகருடன் அதிக நேரம் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது.   இதை அடுத்து சேகரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

th

சேகரும் ரமேஷ் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இதனால் சேகர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததும் தெரிய வந்திருக்கிறது .  அப்போது சேகரின் மனைவிக்கும் ரமேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கிறார்கள்.   சேகர் வீட்டில் இல்லாத நேரங்களிலும் ரமேஷ்  அடிக்கடி சேகரின் மனைவியுடன் பழகி வந்திருக்கிறார்.   இதை தெரிந்துகொண்ட சேகர்,   மனைவியையும் ரமேஷையும்  கண்டித்திருக்கிறார்.  ஆனால் இருவரும் தொடர்பை விடாமல் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார்கள்.

 இதை தனது நண்பர்களிடம் சொல்லி கவலைப்பட்டு இருக்கிறார் சேகர் .  அவர்கள் ரமேஷை கொலை செய்து  குளத்தில் வீசிவிடலாம்.   யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.   அதன்படி தான் கார் வாங்க வேண்டும் என்று கடந்த 16ம் தேதி என்று ரமேஷை  அழைத்துச் சென்று சேகர், ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் கர்நாடக மாநிலம் நில மங்களா சென்றிருக்கிறார்கள்.  

 விடிய விடிய மது குடித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  பின்னர் போதையிலிருந்து சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு கை,  கால்களை கயிற்றால் கட்டி பெரிய கல் ஒன்று உடலில் கட்டி சடலத்தை ஏரியில் வீசி விட்டு தாரமங்கலம் திரும்பியிருக்கிறார்கள்.    ஏரியில் மிதந்த சடலத்தை எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  

 இந்த விவரங்களை அறிந்து கொண்ட தாரமங்கலம் போலீசார்  சேகர்,  நண்பர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  தவிர மேலும் 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.