நடுரோட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு

 
murder murder

சென்னையில் முன் விரோதம், நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

murder

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவுடி மௌலி(24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் மௌலி இருசக்கர வாகனத்தில் மந்தைவெளியில் உள்ள ரேஷன் கடைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மந்தைவெளி ரயில்வே பாலம் அருகே வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மௌலியை வழிமறித்து கத்தியால் வெட்டி விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மயிலாப்பூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மௌலியை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மௌலி இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மௌலியும்,  மைலாப்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி கௌதம்(19), விஜயகுமார் @ பிக் ஷோ(21), சபரி, மணி , புருஷோத்தமன் ஆகியோர் ஏரியாவில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். பின்னர்  மௌலிக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  கடந்த 5 வருடங்களாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்த நிலையில், கோவில் திருவிழா உள்ளிட்ட இடங்களில் லேசான பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

murder

இந்நிலையில்  கௌதம், விஜயகுமார் உள்ளிட்டோர் மௌலியை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் இன்று காலை ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்த மௌலியை பின்தொடர்ந்தது வந்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதும்‌ விசாரணையில் தெரியவந்துள்ளது ‌. இதனை தொடர்ந்து மைலாப்பூர் போலீசார் தப்பி ஓடிய கௌதம், விஜயகுமார், சபரி, மணி , புருஷோத்தமன் உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பிரச்சனை காரணமாக வேறு பகுதியில் மௌலி குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், துபாய்க்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், இன்று கத்தியால் மௌலியை வெட்டியதாக அவரது தாத்தா- பாட்டி தெரிவித்தனர். வெட்டுப்பட்டவுடன் யாருமே முன் வந்து உதவவில்லை எனவும் 4 பெட்ஷிட் முழுவதும் ரத்தக்கறை எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார், உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர் சித்ரா கோரிக்கை வைத்தார். கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பின்னரே கஞ்சா போதை மோதலில்  அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?  தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.