"இறந்தவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியா ?"-அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்

 
dead body

"இறந்தவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியா ?"-அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர் 

பிரித்தானியாவில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை வெளியானது

ஆறு மாதங்களுக்கு முன்பே கொரானாவால் உயிரிழந்த நபர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சி அருகேயுள்ள உறையூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் கொரானா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடிவு செய்தார் .அதனால் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்ததுமே அவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி  அங்குள்ள சுகாதார மையத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
ஆனால் செல்வராஜுக்கு முதல் தடுப்பூசி செலுத்தி கொண்ட நான்கு நாட்களிலே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியான  அவரது குடும்பத்தினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது .ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் அவர்கொரானாவால்  உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது இறந்து போன செல்வராஜ் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவர் பயன்படுத்தி வந்த செல்பேசிக்கு குறுஞ்செய்தி சுகாதார துறையினரிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அவரது குடும்பத்தினர் அந்த எஸ் எம் எஸ் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் . இறந்து போன செல்வராஜுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக விபரங்களுடன் வந்த குறுஞ்செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் எங்கே தவறு நடந்தது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.