கோவையில் அதிர்ச்சி - கல்லூரியில் வைத்தே மாணவியை பலாத்கார முயற்சி
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே தனி யார் இன்ஜினியரிங் கல்லுாரியில் மாணவிக்கு, செக்ஸ் தொல்லை கொடுத்த முதன்மை நிர்வாக அதி காரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பளையம், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளது. இங்கு 23 வயது பெண் கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டு, எம். இ., படித்து வந்தார். கல்லுாரியில் சி.இ.ஓ., வாக பணியாற்றி வரும் 39 வயதான பிரசன்னன், அந்த பெண்ணுக்கு, வாட்ஸ் அப்பில் அடிக்கடி குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். ஒரு கட்டத்தில் அந்தரங்க செய்திகளை அனுப்ப ஆரம்பித்தார். இது வெளியில் தெரிந்தால், பிரச்னையாகிவிடும் என பயந்து, குறுஞ்செய்திகளை, அப்பெண் அழித்து வந்தார்.
கடந்த மார்ச் 15ம் தேதி மாலை பணி முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, தனது அறைக்கு அப்பெண்ணை அழைத்த பிரசன்னன், உள்ளே வந்ததும், பிரசன்னன் அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து, ஆடைகளை களைய ஆரம்பித்தார். இதனால் அதிர்ந்து போன பெண், அவரை விலக்கி விட்டு அங்கிருந்து வெளியேறினார். இது குறித்து அப்பெண்ணின் கணவர், கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் கூறினார். இதையடுத்து, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பிரசன்னன் மீது நடவடிக்கை எடுக்க, பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப் பெண் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.தலைமறை வான பிரசன்னனை, போலீசார் தேடி வருகின்றனர்.


