மது போதையில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகன்
கோவில்பட்டியில் மது போதையில் தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57), கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், இருவரும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதேபோல் நேற்று இரவு வீட்டில் இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் மது போதையில் இருந்த முனியசாமி அங்கேயே படுத்து உறங்கி விட, ஆத்திரத்தில் இருந்த ராகுல் காந்தி, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து முனியசாமி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கையில் காயமடைந்த நிலையில் இருந்த ராகுல் காந்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சுக்கு சென்றுள்ளார் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியசாமி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


