நீட் பயிற்சி மையத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
ஓசூரில் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி எம்எம் நகர் பகுதியில் அறம் அகாடமி என்னும் தனியார் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தை அஞ்செட்டி கேரட்டி பகுதியை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார் திருமணம் ஆகவில்லை, இந்நிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த 7 மாணவிகள் மட்டும் கடந்த 9 மாதங்களாக 12ம் வகுப்பு முடித்து நீட் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.அகாடமியை நடத்தி வரும் கல்யாண சுந்தரம் என்பவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் ரீதியாக பேசி வருவதாக பெற்றோருக்கு அவர் போனில் தகவல் அளித்துள்ளார்.பின்னர் மாணவியின் தந்தை சகோதரர் கார்த்திக் மற்றும் உறவினர்கள் என 4 பேர் நீட் சென்டரில் விசாரிக்க வந்த போது மாணவியின் சகோதரர் கார்த்திக், உறவினர் மகிமைதாஸ் இருவரையும் உள்ளூர் அடியாட்களை அழைத்து அலுவலகத்திற்குள்ளாக கையில் வைத்த ஆயுதத்தால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் காயமடைந்த மாணவியின் அண்ணன், உறவினர் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மையத்தில் விசாரணை மேற்கொண்டனர், அப்போது அகாடமியை நடந்தி வந்த கல்யாண சுந்தரம் மற்றும் அடியாட்கள் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


