2 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது

 
rape
எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சியிலுள்ள புதுக்குடியானூர் அரசு துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் சில்மிஷம் செய்த அதே பள்ளி ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
rape
சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சியிலுள்ள புதுக்குடியானூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி என்பவர் அதே பள்ளியில் 2ம் வகுப்பு பயிலும் மாணவியரிடம் சில்மிஷம் செய்ததாக அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறியதையடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனியை கைது செய்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் மாணவியிடம் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.. அரசு துவக்கப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயிலும் 7 வயது மாணவியிடம் ஆசிரியரே சில்மிஷம் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.