நடைபயிற்சி சென்ற ஆசிரியர் வெட்டி படுகொலை
தென்காசி மாவட்டம் பழங்கோட்டை அருகே நேற்று இரவு சாலையில் ஆசிரியர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கழுகுமலை அருகே உள்ள சி ஆர் காலனி பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுதந்திர குமார் (40) என்பதும்,. நேற்று மாலை 5.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நேற்று மாலை 5 மணிக்கு மேல் சி ஆர் காலனியில் இருந்து நடை பயிற்சி சென்றதாக கூறப்படுகிறது. பழங்கோட்டை கே. ஆலங்குளம் இணைப்பு சாலையில் காமாட்சிபுரம் குளம் அருகே வைத்து மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர் . சுதந்திரகுமார் தஞ்சாவூர் மாவட்டம் தொண்டைமான் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து சில நாட்களில் பிரிந்து விட்டதாகவும், பின்பு டைவர்ஸ் ஆகி ஏழு ஆண்டுகள் ஆனதும் தெரியவந்துள்ளது.
தற்போது திருப்பூர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் அளவில் ஒரு இருசக்கர வாகனம் நின்றுள்ளது, சம்பவ இடத்தில் மதுபாட்டில் வரும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இருசக்கர வாகனம் யாருடையது, என்பது குறித்தும், கொலைக்கான காரணம் என்ன, என்பது குறித்தும் குருவிகளும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


