ஆசிரியை ராதிகாவின் ஆபாச வீடியோக்கள்! ஐகோர்ட் காட்டிய அதிரடி

 
டெ

மாணவர்களுடன் பாலியல் உறவில் இருக்கும் ஆசிரியை ராதிகாவின் ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில்  ராதிகா மற்றும் வீரமணி மீதான குண்டர் சட்ட  நடவடிக்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

 மதுரை மாவட்டத்தில்  45 வயதான ஆசிரியை ராதிகா அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.   அவர் பள்ளி மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.  

 ராதிகாவுடன் கள்ள உறவிலிருந்து 39 வயதான வீரமணி என்கிற வாலிபர் தான் அந்த வீடியோக்களை எடுத்திருக்கிறார்.  அந்த வீடியோக்களை ராதிகா பார்த்து ரசிப்பதற்காக வீரமணியின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.   பின்னர் அந்த படங்கள் 2021 ஆம் ஆண்டில் பலருக்கு பகிரப்பட்டு இருக்கின்றன.  இந்த விவகாரம் மாணவர்கள் பெற்றோர்கள் என்று பலருக்கும் தெரிய வந்ததை அடுத்து இது குறித்து போலீசுக்கு புகார் சென்றது. 

ம்

 விவகாரம் பெரிதாக ஆனதால் வீரமணி,  ராதிகா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி அன்று கைது செய்யப்பட்டனர்.  அப்போது ராதிகாவிடம் இருந்து செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.   இதன் பின்னர் ராதிகா , வீரமணி இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

 இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய 2022 ஆம் ஆண்டில் ஜூலை 11ஆம் தேதி அன்று மதுரை காவல் ஆணைய உத்தரவிட்டிருந்தார் .  அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ராதிகா, வீரமணி இருவரும் மதுரை உயர்நீதிமன்ற நிலையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது உத்தரவில் எந்த தவறும் இல்லை . இந்த கைது உத்தரவை எதிர்த்து ராதிகா தரப்பில் அனுப்பிய மனு முறையாக பரிசீலித்து நிராகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

 இதன் பின்னர் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் போது,   வீரமணியை சுதந்திரமாக நடமாட அனுமதித்தால் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும்.  அதனால் கைது உத்தரவில் எவ்வித தவறையும் நாங்கள் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.   ராதிகாவின் மனு தகுதி அடிப்படையில் ஏற்புடையதும் அல்ல.  அதனால் இந்த இரண்டு மணுக்களையும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டுள்ளனர்.