‘எவன் கூட போனில் பேசுற’... இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த 3-வது கணவன்

 
murder

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள 3-வது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

murder

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரத்தை சேர்ந்தவர் கவிதா(31) இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். கவிதாவிற்கு அகிலன் (12) தர்ஷித்(8) என்று இரண்டு மகன்கள் உண்டு. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மூன்றாவதாக பாலவாடியைச் சேர்ந்த அருணாச்சலம்(29) என்பவரை திருமணம் செய்துள்ளார். அருணாச்சலம் கவிதா தம்பதியினர் கொளத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கவிதா கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.  நேற்று காலை கோவைக்கு சென்ற அருணாச்சலம் மாமியார் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி கவிதாவை தன்னுடன் கொளத்தூருக்கு அழைத்து வந்துள்ளார். 

கவிதா நேற்று இரவு முழுவதும் வேருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவிதா வேறொருவருடன் சகள்ள தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த அருணாச்சலம் கொளத்தூர் சிவசக்தி நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கவிதாவை  அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவாக உள்ள அருணாச்சலத்தை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.