குடிபோதையில் தாயை தாக்கிய தம்பியை கொலை செய்த அண்ணன்!
குடிபோதையில் தாயை தாக்கிய தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தம்பியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. செஞ்சி கிருஷ்ணாபுரம் வஉசி தெருவில் வசித்து வருபவர் பாபு. மின்வாரிய ஊழியராக பணி செய்து வந்த இவர், கடந்து மூன்று வருடத்திற்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பணியை இளைய மகன் தாமோதிரனுக்கு மின்வாரியத்தில் கள உதவியாளராக பணியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இளைய மகன் தாமோதிரன் தன் தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தும் குடிபோதையில் வீட்டு ஜன்னல்களை உடைத்தும் தாயை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் முருகன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு தம்பியை பலமாக தாக்கியதில் தம்பி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செஞ்சி காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தம்பியை கொலை செய்த அண்ணன் முருகனை செஞ்சி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குடும்ப பிரச்சனையில் தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த செஞ்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது


