குரங்குகள் வைத்து கடிக்க வைத்த கொடூரம்! இதில் 16 பேர் உயிரிழப்பா?

 
a

அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குரங்குகளை வைத்து கடிக்க வைத்த கொடூரம் நிகழ்ந்தது என்ற தகவல் பரவுகிறது.  அந்த ஆசிரமத்தில் இருந்த 16 பேர் காணவில்லை என்பதால் குரங்குகள் கடித்து அந்த 16 பேரும் உயிரிழந்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் குண்டலபுலியூரில் இயங்கி வந்தது அன்பு ஜோதி ஆசிரமம்.   ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் , மனநலம் குன்றியோர் என 150க்கும் மேற்பட்டோர் இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர்.

 கடந்த 2021 டிசம்பர் மாதம் இந்த ஆசிரமத்தில் அமெரிக்க வாழ் தமிழர் சலீம் கான் தனது மாமனார் ஜவாஹிருல்லாவை சேர்த்துள்ளார்.   அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது மாமாவை சந்திக்க அந்த ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார் சலீம்.   ஆனால் அங்கு ஜவாஹிருல்லா இல்லாததை கண்டு சலீம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஆசிரம நிர்வாகிகளிடம் இது குறித்து கேட்டும்,  உரிய பதில் சொல்லவில்லை.

as

 இதனால்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு போலீசார், வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கடந்த பத்தாம் தேதி அதிரடி சோதனை நடத்தி உள்ளார்கள்.   இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் செயல்பட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. 

 மேலும்,  ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்றோர்,  மனநலம் குன்றியோர் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சங்கிலியாக கட்டப்பட்டது தெரிய வந்திருக்கிறது.   ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து சமூக நல ஆர்வலர் ராஜாம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜுபின், ஆசிரமம் மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்பட 144 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.   முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தினை முடிசீல் வைக்கவும் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டிருக்கிறார்.  இந்த சூழ்நிலையில் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களின் 16 பேரை காணவில்லை என்று தகவல் பரவி இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.  ஆசிரமத்தில்  இருந்தவர்களை குரங்குகள் கடித்து குதறி வருகிறது என்கிறார்கள்.  மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குரங்குகளை வைத்து  கொடூரம் செய்வதாகவும் தகவல் பரவுகிறது.  அப்படி குரங்குகளால் கடித்து தாக்கப்பட்டு அந்த 16 பேரும் உயிர் இழந்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.