மனைவி பணம் தராததால் 2ஆவது மாடியில் இருந்து குதித்த கணவர்

 
k

மனைவி பணம் தராததால் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் கணவர்.   சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் மது அருந்த பணம் கொடுக்காததால் இந்த அதிர்ச்சி செயலை செய்திருக்கிறார் அந்த வாலிபர்.  இடுப்பு, கால் எலும்பு இதனால் முறிந்துள்ளது.

 கன்னியாகுமரியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.  அப்படித்தான் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் சுற்றுலா வாகனத்தில் கன்னியாகுமரி வந்திருக்கிறார்கள்.   படர் நிலம் பகுதியைச் சேர்ந்த ரதிஷ் என்பவர் தன் மனைவி இரு மகளுடன் வந்திருக்கிறார்.

h

கன்னியாகுமரியில் ஒரு விடுதியில் அறை எடுத்து இவர்கள் தங்கி இருக்கிறார்கள்.  அப்போது மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டு இருக்கிறார் ரதீஸ்.   அவர் கொடுக்க மறுத்திருக்கிறார்.   இதனால் மனமடைந்து தங்கி இருந்த விடுதியின் மூன்றாவது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறா.  குமரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ரதீஷ் குடும்பத்தினர் ஆகியோர் அவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

அப்போது தன்னை மீட்க நினைத்தால் குதித்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.  இதில் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தொடர்ந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி மூன்றாவது மாடியில் இருந்து இறங்கி இரண்டாம் மாடிக்கு வந்து அங்கிருந்து குதித்துள்ளார்.  இந்த சம்பவத்தில் ரதீஷின் இடுப்பு , கை கால் பகுதி எலும்புகள் உடைந்துள்ளன.   இதன் பின்னர் அவர் குமரி அரசு மருத்துவமனையில் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

ரதீஷுக்கு மனநலக் கோராறு இருந்திருக்கிறது.  ஏதாவது ஒரு பிரச்சனையை அந்த நேரத்தில் சொல்லி தற்கொலைக்கு முயன்று வருவது அவரது வழக்கமாக இருந்திருக்கிறது.   இந்த நிலையில் தான் மது அருந்த பணம் தரவில்லை என்று தற்கொலைக்கும் முயன்று இப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.