மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவர்

 
ax


 விசேஷத்திற்கு சென்ற இடத்தில் நடந்த குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கோடரியால் வெட்டி படுகொலை செய்திருக்கிறார் கணவர். 

 ஒடிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டம் கிராண்டிபாலி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் பிதானி.  இவரின் மனைவி லட்சுமி .    விசேஷத்தில் பங்கேற்பதற்காக தனது சகோதரர் வீட்டில் சென்று இருக்கிறார் நாராயணன்.   அவருடன் மனைவி லட்சுமி சென்றிருக்கிறார்.   அங்கு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டாகி இருக்கிறது. 

ம்

 இந்த தகராறில் ஆத்திரமடைந்த நாராயணன் அங்கே கிடந்த கோடரியை எடுத்து வந்து மனைவி லட்சுமியை சரமாரியாக வெட்டி இருக்கிறார்.  இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து லட்சுமி உயிரிழந்திருக்கிறார்.   இதை பார்த்ததும் விசேஷத்தில் இருந்த உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

 சம்பவம் குறித்து அறிந்த கோச்சபடா போலீசார் விரைந்து வந்தனர்.  லட்சுமியின் சகோதரர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து நாராயணனை கைது செய்துள்ளனர் . லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். 

 விசேஷ வீட்டில் நடந்த இந்த சம்பவம் கந்தம்மால் மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.