ராத்திரியானால் ஊசியை கையில் எடுக்கும் கணவன்...செல்லமகளின் வரதட்சணை கொடுமையை தாங்க முடியாத தந்தை..அதிர்ச்சி வீடியோ

 
kerala

இரவு நேரம் வந்துவிட்டால் போதும் ஊசியை கையில் எடுத்துக்கொண்டு உடம்பு முழுவதும் குத்துவார் கணவன்.  அவர் என்னை அடித்து சித்ரவதை செய்யாத இரவே இல்லை என்று  செல்ல மகளின் வரதட்சணைக் கொடுமையை பற்றி கேள்விப்பட்ட தந்தை  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரின் தற்கொலைக்கான காரணம் உறவினர்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போதுதான் எதார்த்தமாக அவரது செல்போனை பார்த்த போது செல்ல மகளுக்கு நேர்ந்த கொடுமை தாங்காது தான்  தற்கொலை செய்து கொள்ளப் போவதாக  கதறி அழுத அந்த வீடியோவை  பார்த்த உறவினர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

 கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மூசாக்குட்டி.  இவர்  கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார்.  அவரது தற்கொலைக்கான காரணம் குடும்பத்தினருக்கு தெரியாமல் இருந்தது.    தற்போது அவரது செல்போனை எடுத்து எதார்த்தமாக பார்த்தபோது அதில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போனார்கள்.  

 தனது செல்ல மகள் ஹிபாவுக்கு நேர்ந்த வரதட்சணைக் கொடுமையை தாங்க முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.  

moo

 ’’திருமணம் செய்துகொடுத்த இரண்டே வருடங்களில் கையில் பச்சை குழந்தையுடன் என் வீட்டிற்கு வந்து நிற்கிறார் என் செல்ல மகள்.   மருமகனிடம் பேசியபோது அவர் என்னை மிகவும் மோசமாக பேசிவிட்டார்.   என்னால அதை தாங்க முடியவில்லை.   என் மகள் தனக்கு நேர்ந்த எல்லா கொடுமையும் என்னிடம் சொல்லி அழுதார்.  திருமணத்தின் போது 18 சவரன் நகைகள் கொடுத்திருந்தேன்.  அதன் பின்னரும் 6 சவரன் நகையை கொடுத்திருக்கிறேன்.   அப்போதும் வரதட்சணை போதவில்லை என்று என் மகளை துன்புறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள் .

என் மகளை தற்காலிகமாகத்தான் அவர் வைத்திருக்கிறார் என்கிறார். வேறு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் சொல்கிறார்.   செல்லமாக வளர்த்த மகளுக்கு இப்படியா ஒரு நிலைமை ஏற்பட வேண்டும்.   இதை பார்த்துக் கொண்டு என்னால் இருக்க முடியாது’’ என்று அந்த வீடியோவில் கதறி அழுதபடி சொல்லியிருக்கிறார்கள் மூசாக்குட்டி.

 இதையடுத்து இந்த வீடியோவை மூசாக்குட்டியின் குடும்பத்தினர் போலீசில் ஒப்படைக்க,   அதன்படி ஹிபாவின் கணவர் ஹமீதை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

 இதுகுறித்து ஹிபாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,    ‘’என் கணவர் வீட்டில் நான் அனுபவிக்காத சித்திரவதைகளே இல்லை.   பணமும் தங்கமும் என்னிடம் கேட்டுக் கேட்டு சித்திரவதை செய்து கொண்டே இருந்தார்கள்.   ஒருநாள் இரவு கூட நான் நிம்மதியாக தூங்கியது இல்லை.  எல்லா இரவிலும் என்னை அடிப்பார்.   இரவு வந்துவிட்டால் கையில் ஊசியை எடுத்துக்கொள்வார்.  என்  உடலில் ஊசி குத்தாத இடமே இல்லை.   எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை பார்த்த என் தந்தை இப்போது உயிருடன் இல்லை’’ என்று கண்ணீர் வடித்திருக்கிறார்.

 இளம் மருத்துவ மாணவி உட்பட பலரும் வரதட்சணை  கொடுமையால் கேரளாவில் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதால் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை அரசு அறிவித்தாலும் வரதட்சணை தலைதூக்கி வருவது பெரும் கவலையை அளிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.