இடையூறாக இருந்த கணவருக்கு விசம் கலந்த குவாட்டர் கொடுத்த மனைவி! கட்டிங் வாங்கி குடித்த நண்பருக்கும் நேர்ந்த கதி

 
k

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குவாட்டர் மது பாட்டில் வாங்கி அதில் சிரஞ்சி மூலம் விஷத்தை கலந்து கணவருக்கு கொடுத்திருக்கிறார்.  அதில் கணவரின் நண்பர் தனக்கும் கட்டிங் கேட்க அவருக்கும் கட்டிங் கொடுத்து விட்டு  சாப்பிட்டபோது இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

 செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அடுத்த நடராஜபுரம்.  இப்பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்.  இவரது மனைவி கவிதா.  இத்தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.   செங்கல்பட்டில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்திருக்கிறார் சுகுமார்.   மனைவி கவிதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.

 வேலை பார்த்து இடத்தில் கவிதாவிற்கும் அவருடன் பணிபுரியும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ள உறவாக மாறி இருக்கிறது.   இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுகமாருக்கு தெரிய வந்ததை அடுத்து  மனைவியை கண்டித்து இருக்கிறார்.   இந்த விவகாரத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  

உ

 கணவர் இருக்கும் வரை கள்ள உறவில் ஈடுபட முடியாது என்று என்பதால் கணவரை கொன்று விட முடிவு எடுத்திருக்கிறார்.  இதனால் சுகுமாரன் அண்ணன் மணியிடம் சொல்லி இரண்டு குவாட்டர் பாட்டில் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.   அவர் இரண்டு குவாட்டர் பாட்டில் வாங்கி வந்ததும் ஒன்றை அவரிடமே கொடுத்து விட்டு ஒரு குவாட்டர் பாட்டிலை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் சென்று இருக்கிறார். 

 ஏற்கனவே வேலை முடிந்து மது அருந்தி விட்டு வந்த கணவனிடம் உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவர் வாங்கி கொடுத்து விட்டுப் போனார் என்று சொல்லி குவாட்டர் பாட்டிலை கொடுத்து இருக்கிறார்.   அந்த குவாட்டர் பாட்டிலை வாங்கிய சுகுமார்,  இன்றைக்கு நான் குடித்ததே போதும்.   நாளைக்கு சாப்பிடுகிறேன் என்று வாங்கி வைத்திருக்கிறார். 

 முன்னதாக அந்த மது பாட்டிலில் சிரஞ்சீ மூலமாக விஷம் கலந்து இருக்கிறார் கவிதா . கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கொடுத்த மது பாட்டிலை மறுநாள் வேலைக்குச் செல்லும் போது எடுத்துச் சென்று இருக்கிறார் சுகுமார்.   மதிய உணவின்போது இந்த குவாட்டர் பாட்டிலை திறந்து சாப்பிட சென்றிருக்கிறார் .  அப்போது அவருடன் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நண்பர் ஹரிலால் என்பவரும் ஒரு கட்டிங் கேட்டிருக்கிறார்.  அதனால் அவருக்கு ஒரு கட்டிங் கொடுத்து விட்டு சுகுமார் ஒரு கட்டிங் மது சாப்பிட்டு இருக்கிறார். 

 மது குடித்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.  உடனே இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மதுவில் விஷம் கலந்து இருப்பதை சொல்லி இருக்கிறார்கள்.   இருவருமே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளனர்.   இதுகுறித்து படாளம் போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க,  அவர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த  கணவனை கொலை செய்ய மதுவில் விஷம் கலந்ததை  ஒப்புக் கொண்டிருக்கிறார் கவிதா. இதை எடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.