ஈரோடு அருகே இளம்பெண்ணை கல்லால் அடித்து படுகொலை செய்த திருநங்கை

 
murder

ஈரோடு அருகே இளம்பெண்ணை கல்லால் அடித்து படுகொலை செய்த சம்பவத்தில்  திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

murder

ஈரோடு ரங்கம்பாளையம் புறநகர் வட்டச் சாலையோர முள் காட்டில்,  25 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 10 ம் தேதி கல்லால் தாக்கி படுகொலை செயல்பட்டு அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அங்கிருந்த விசிட்டிங் கார்டு மூலம் துப்பு துலக்கிய போலீசார் உயிரிழந்த பெண் பெருந்துறை அருகே பிச்சாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது நர்மதா என்பதை கண்டறிந்தனர்.  தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி சி டிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ஆய்வு நடத்திய போது பேருந்து நிலையத்தில் திருநங்கை ஒருவர் நிர்மலாவை அழைத்துச் செல்வது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய  திருநங்கை தீபன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிர்மலாவை தகாத உறவுக்காக திருநங்கை புறநகர் வட்டசாலைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திருநங்கை குறித்து நிர்மலா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் ஆவேசம் அடைந்த திருநங்கை நிர்மலாவை தலையால் தலையில் கல்லை தூக்கி போட்டு படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்த தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து திருநங்கையை கைது செய்துள்ள தாலுகா போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.