பெண்ணுறுப்பு முழுவதும் குதறப்பட்ட புண்கள் -உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் வெறியாட்டம் -தடயவியல் சோதனையில் அம்பலம்

 
ukrain ukrain

உக்ரைனின் புச்சா நகரில் உக்ரைன் பெண்களை ரஷிய வீரர்கள் கற்பழித்து கொடூரமாக உறுப்புகளை சிதைத்து  கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சண்டை கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. 60 நாட்களை தாண்டி போரானது நடந்து வருகிறது, இந்த தாக்குதலில் உக்ரைனில் வாழும் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை இழந்து உறவுகள் தவிக்கும் காட்சிகள் அவ்வபோது வெளிவருகின்றன. 
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.
அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல பெண்களின் உடலுறுப்புக்ளை  அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். சில பெண்களின் பெண்ணுறுப்புகள்  சிதைக்கப்பட்டு காயங்களுடன்  உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.