வேறொரு பெண்ணுடன் உல்லாசம்- கணவரை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி
பண்ருட்டி அருகே வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்த கணவரை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள தாழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (50), முந்திரிக்கொட்டை உடைக்கும் கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கு உஷா என்கிற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருந்து வந்த நிலையில், செல்வமணிக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால், செல்வமணிக்கு உஷாவுக்கும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மது போதையில் இருந்த செல்வமணி, மனைவி உஷாவை தாக்கியதால் திருப்பி உருட்டு கட்டையால் தாக்கியதில் கணவர் செல்வமணி தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடாம்புலியூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூவராகவன் காடம்புலியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கணவரை அடித்துக் கொன்றுவிட்டு தலை மறைவாக இருந்த மனைவி உஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


