காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!
திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு தடையாக கணவரை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று மாரடைப்பு போல் நாடகமாடிய மனைவி பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என அறிந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த வி.கே. அசோக் (45) மற்றும் பூர்ணிமா (36) ஆகியோர் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, மெடிபள்ளியில் உள்ள பிருந்தாவன் காலனியில் தங்கள் (11) வயது மகனுடன் வசித்து வருகின்றனர். அசோக் ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் நிலையில் பூர்ணிமா வீட்டிலேயே குழந்தைகளுக்கு டியூஷன் கொடுத்து வாழ்ந்து வந்தனர். சில மாதங்களாக பூர்ணிமா அதே பகுதியை சேர்ந்த பலேட்டி மகேஷ் (22) என்ற நபரைச் சந்தித்து திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தொடர்ந்தார். இதனை அறிந்த அசோக் அவளை பலமுறை எச்சரித்தும் அதை பூர்ணிமா கண்டுகொள்ளவில்லை. மேலும் கணவனைக் கொன்றால் மகேஷடன் இருக்கும் தொடர்பை யாராலும் தடுக்க முடியாது என்று நினைத்த பூர்ணிமா, தனது காதலன் மகேஷிடன் தெரிவித்தார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த மகேஷ் அவரது நண்பர் சாயுடன் சேர்ந்து கொள்ள திட்டத்தைத் தீட்டினார். இந்த மாதம் 11 ஆம் தேதி, அசோக் தனது பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அதற்கு முன்பு மகேஷ் , சாய் வீட்டிற்கு வந்ததால் ஒரு அறையில் அவர்களை தங்க வைத்த பூர்ணிமா மகனை சாப்பிட வைத்து தூங்க வைத்து ஒரு அறையில் வைத்து பூட்டி கொண்டார். அசோக் சாப்பிட்ட பின்னர் படுக்கறையில் தூங்கி கொண்டுருந்தபோது பூர்ணிமா அவரது காதலன் மகேஷ் மற்றும் அவரது நண்பர் சாய் ஆகியோர் இணைந்து அசோக்கை கழுத்து நெரித்து கொலை செய்தனர். பின்னர் மகேஷ் , சாய் இருவரும் அசோக் இறந்ததை உறுதி செய்து அவர்களை அனுப்பி வைத்து பூர்ணிமா தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்து வீட்டாருக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் சில மாதங்களாக பூர்ணிமா நடவடிக்கை சரியில்லை என அசோக்கின் குடும்பத்தினர் பூர்ணிமா மீது சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தனர்.

இதனையடுத்து போலீசார் அசோக் உடலை பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அனுப்பினர். இதில் அசோக் மாரடைப்பால் சாகவில்லை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதை டாக்டர்கள் அறிக்கையில் தெரிய வந்தது. இதனையடுத்து பூர்ணிமாவை போலீசார் பிடித்து அவர்கள் பாணியில் விசாரித்தபோது காதலன் மகேஷ் மற்றும் அவரது நண்பர் சாய் உதவியுடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் பூர்ணிமா, மகேஷ் மற்றும் சாய் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தை இறந்தநிலையில் தாய் சிறைக்கு சென்றதால் அவர்களின் 11 வயது மகன் பெற்றோர் இருவரும் இல்லாமல் தந்தையின் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


