"நல்லா வேலை செய்யும் கணவர் விற்பனைக்கு" -மனைவி கொடுத்த விளம்பரம் -போட்டி போட்டு ஏலம் எடுத்த பெண்கள் .

 
love

பொருட்களை ஏலம் விடும் இணையதளத்தில் ஓர் மனைவி, 'தனது கணவன்  விற்பனைக்கு 'என்று விளம்பரம் கொடுத்ததை பார்த்த பல பெண்கள் போட்டி போட்டு ஏலமெடுத்த கொடுமை நடந்துள்ளது 


அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் என்பவருடன் வசித்து வந்தார் .திடீரென்அவர்களுக்குள் பண பிரச்சனை வந்ததால் ,அந்த மனைவி தனது கணவனை  இணைய தளத்தில் ஏலம் விட்டு விற்க முடிவு செய்தார் .அந்த விளம்பர ஏலத்தில்,'கணவன்  விற்பனைக்கு' உள்ளதாக அந்த இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

லிண்டா வெளியிட்ட அந்த விளம்பரத்தில் "தன் கணவன் ஜானுக்கு 37 வயது, அவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.
அவருக்கு முறையாக சாப்பாடு  கொடுத்து , தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் நன்றாக வேலை பார்ப்பார் .  இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பெண்கள் போட்டி போட்டுகொண்டு அந்த பெண்னின் கணவன்  ஜானை ஏலம் கேட்டிருந்தனர்.அவர் கிட்டத்தட்ட 100 நியூசிலாந்து டாலர் வரை  விலை போனார் .அதை பார்த்த அந்த பெண்ணின் கணவர் ஜான் முதலில் அதிர்ச்சியாகி ,பிறகு அதை  ரசித்தார். 
சமீப காலங்களில் தனது கணவர் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்ட முதலாவது விளம்பரம் இது என்று ட்ரேட் மீ  நிறுவனத்தின் மேலாளர் சம்ஸ் தெரிவித்தார்.