தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு மகளை இரையாக்கிய பெண்! கர்ப்பமானதால் பரபரப்பு
பெற்ற மகளை, தாயே தனது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமம், பகுதியை சேர்ந்த காவலாளி வேலை பார்த்து வரும் ஒருவர் மனைவி மற்றும் 20வயது மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். காவலாளி தான் வேலை பார்க்கும் இடத்தில் தங்கி வேலை பார்த்து வருவதால் வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இதற்கிடையே அவரது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து காவலாளி இல்லாத நேரத்தில் அடிக்கடி அந்த நபர் வீட்டுக்கு வந்து காவலாளி மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையறிந்த காவலாளி தனது மனைவியை பலமுறை கண்டித்தும் அவர், கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தாயின் நடவடிக்கையால் விரக்தி அடைந்த மகளும் தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தாய் தூக்க மாத்திரை வாங்கி வந்து கொடுத்துள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அசந்து தூங்கிவிட்டார். பின்னர் கண்விழித்து பார்த்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கேட்டபோது அவரது தாய் ஒன்றும் இல்லை, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி சமாளித்தார். இந்த நிலையில் கடந்த 23ந் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். அவர் அசந்து தூங்கியபோது தாயின் கள்ளக்காதலன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்து அலறி கூச்சலிட்டார்.
இதையடுத்து மகளை கண்டித்த தாய் இதுபற்றி வெளியே ஏதும் சொல்லக்கூடாது என்று கூறி ஒரு அறையில் போட்டு மகளை பூட்டி வைத்தார். இந்த நிலையில் தாயின் பிடியில் இருந்து நைசாக தப்பிய மகள் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அவரது உறவினர்கள் பரிசோதனை செய்ததில் அவர் 7 வார கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பிறகு இளம்பெண்ணின் சம்மதத்துடன் மருத்துவ குழுவினர் கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இந்த நிலையில் பெற்ற மகள் என்றும் பாராமல் தூக்க மாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி வயது (50) இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்யாறு மகளிர் போலீசில் புகார் அளித்தார். அங்கு ஜீரோ எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு, சம்பவம் நடந்த இடம் வடபழனி பகுதி என்பதால் வடபழனி மகளிர் காவல் நிலையத்திற்கு FiR அனுப்பப்பட்டது. இதுகுறித்து வடபழனி மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

